பொன்னேரி வள்ளலார் சத்திய சபையில் புதிய வழிபாடு கட்டிடம் திறப்பு

பொன்னேரி வள்ளலார் சத்திய சபையில் புதிய வழிபாடு கட்டிடம் திறப்பு
X

பொன்னேரி வள்ளலார் சத்திய சபையில் புதிய வழிபாடு கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

பொன்னேரியில் அருட்பிரகாச வள்ளலார் சன்மார்க்க சத்திய சபையில் புதிய வழிபாடு கட்டிடத்தை ஜோதி குரு ஞானசபை தலைவர் அன்பழகன் திறந்து வைத்தார்.

பொன்னேரி அருட்பிரகாச வள்ளலார் சத்திய சபையில் புதிய வழிபாடு கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சன்மார்க்க அன்பர்கள் திரளாக பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபை அமைந்துள்ளது. இந்த சபையில் புதிதாக கட்டப்பட்ட நித்யஜோதி வழிபாடு கட்டிடம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.விழாவின் முதல் நிகழ்வாக ஜோதி வடிவில் காட்சியளித்த அருட்பிரகாச வள்ளலாருக்கு அகவல் ஓதப்பட்டது.

இதையடுத்து அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி என பாடல்கள் பாடியபடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஜோதி குரு ஞானசபை தலைவர் அன்பழகன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அணையா ஜோதியை ஏற்றி வைத்தார்.இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சன்மார்க்க கஞ்சி வார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சன்மார்க்க அன்பர் ஆனந்தன் சபை வாசலில் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து அனைவருக்கும் அருட்கஞ்சி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சன்மார்க்க அறிஞர்கள் மற்றும் அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு வள்ளலாரின் அருளை பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை சத்திய சபையின் நிர்வாகிகள் மனோகரன், நடராஜன் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு