சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் இ-உண்டியல் சேவை துவக்கம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி  கோவில் வளாகத்தில் இ-உண்டியல் சேவை துவக்கம்
X

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் இ உண்டியல் சேவை துவக்கி வைக்கப்பட்டது.

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அன்னதானத்திற்காக இ- உண்டியல் க்யூ ஆர் குறியீடு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பெரியபாளையம் அருகே சிறுவாபுரி பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானத்திற்காக இ-உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு சிறுவாபுரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இக்கோவிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்குதல், ரியல் எஸ்டேட், புதிய வீடு கட்டுதல், அரசியல் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை நாட்களில் இக்கோவிலுக்கு திருவள்ளூர்,காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களிலும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் இக்கோவிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேற்று தரிசனம் செய்து செல்கின்றனர்.


இந்நிலையில் பக்தர்களுக்காக கோவிலில் அன்னதான நிகழ்ச்சி துவங்கி நாள்தோறும் 100 பேருக்கும் விழா நாட்களில் 500 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது எளிதாக இருக்க ஆலய வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ஆலய வளாகத்தில் இ- உண்டியல் சேவை க்யூ ஆர் குறியீடு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் செலுத்தும் பணம் பக்தர்கள் அன்னதானத்திற்கு இந்த க்யூ ஆர் குறியீடு மூலம் செலுத்தும் பணம் ஆலய வங்கியின் கணக்கில் நேரடியாக சென்று சேரும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்த சேவையை கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலூர் மண்டல மேலாளர் ராஜசேகர், ஆரணி இந்தியன் ஓவர்சீஸ் கிளை மேலாளர் நரசிம்மஹா ராவ், பெரியபாளையம் கிளை மேலாளர் வெங்கடேஸ்வரலு, சிறுவாபுரி ஆலய தலைமை குருக்கள் ஆனந்தன் உள்ளிட்டோர் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இ- உண்டியல் சேவையை பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் பலர் அன்னதானத்திற்கு க்யூ ஆர் குறியீடு மூலம் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு