பொன்னேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொன்னேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
X

பொன்னேரி தனியார் நிறுவனம் நீர்நிலையை ஆக்கிரமித்து சாலை அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் (மாதிரி படம்)

பொன்னேரியில் நீர்நிலை இடத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து சாலை அமைப்பதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னேரி தனியார் நிறுவனம் நீர்நிலையை ஆக்கிரமித்து சாலை அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த உத்தண்டிகண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் நீர்நிலையை ஆக்கிரமித்து சாலை அமைத்து வருவதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் பொன்னேரி - மீஞ்சூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்வாயை ஆக்கிரமித்து அதன் மீது தனியார் நிறுவனத்திற்கு செல்வதற்கான சாலை அமைக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தனியார் நிறுவனம் முறைகேடாக இடத்தின் தன்மையை மாற்றியுள்ளதாக சாடினர். குறைந்தது 3.ஆண்டுகள் தொடர்ந்து தரிசாக நிலத்தை மட்டுமே நன்செய் நிலத்தில் இருந்து புன்செய் வகைப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் எனவும், அனால் கடந்த போகம் விவசாயம் செய்த நிலத்தை மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டினர். கால்வாயை ஆக்கிரமித்து அதன் மீது சாலை அமைக்கப்பட்டுள்ளதால் மழையின் போது வெள்ள நீர் வெளியேறாது என புகார் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
ai powered agriculture