நல்லூர் ஊராட்சியில் தூய்மைப் பணி அதிகாரி நேரில் ஆய்வு

நல்லூர் ஊராட்சியில் தூய்மைப் பணி அதிகாரி நேரில் ஆய்வு
X

நல்லூர் ஊராட்சியில் உள்ள பகுதியில் தூய்மைப்பணிகளை ஆய்வு செய்த சோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரி அமிழ்தமன்னன்.

நல்லூர் ஊராட்சியில் உள்ள பகுதியில் தூய்மைப்பணிகளை சோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரி அமிழ்தமன்னன் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை பணி முழுமையாக நடை பெறுகிறதா என ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாக கூறபடுகிறது.

இதனையடுத்து சோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரி அமிழ்தமன்னன், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சியில் உள்ள பகுதியில் திடீரென காலை நேரத்தில் ஆய்வு செய்தார். அப்போது தூய்மைப் பணிகளை பார்வையிட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!