ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை

ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
X
ஆரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை.

பெரியபாளையம் அருகே ஆரணியில் உள்ள ஆற்றுப்பகுதியில் இரவு பகல் என பாராமல் மணல் கொள்ளை தடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை. தடுத்த நிறுத்த வேண்டும் என என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இரவு நேரங்களிலும், அதிகாலை வேலைகளில் சட்ட விரோதமாக ஆற்றின் கரை மற்றும் ஆற்று படுகையில் உள்ள மணல் மூட்டைகளில் கட்டி வைத்து இரு சக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் வைத்து ஆரணி, குமரப்பேட்டை, புது வாயில் செங்குன்றம், பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதாகவும், மூட்டை ரூபாய் 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மணல் இருக்கும் இடத்தில் தண்ணீர் உறிஞ்சப்படாமல் சேமிப்பு இருக்கும் பட்சத்தில் ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள மங்கலம், புதுப்பாளையம், காரணி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றுகளில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கூறிய அவர்கள், இது போன்ற மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறையும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் இது போன்ற மணல் கொள்ளைகளால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையும் மட்டுமல்லாமல் கரையை உடைத்து மணல் எடுப்பதால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடும் காலத்தில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட ஆரணி காவல்துறைக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இதனை தட்டிக் கேட்க வேண்டிய போலீசாரை வேடிக்கை பார்ப்பதாக கூறியுள்ளனர். எனவே உயர் அதிகாரிகள் கண்டுகொண்டு மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story