சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
X
கோளூர் கிராமத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறி மது விற்பனை செய்தவர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளூர் கிராமத்தில் சட்டவிரோதமாகவும், ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறியும், மது விற்பனை செய்த கும்மிடிப்பூண்டி ஓபசமுத்திரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை திருப்பாலைவனம் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 பாக்ஸ் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story