நாவை அடக்கி பேச வேண்டும்: ராகுல் காந்திக்கு எச். ராஜா எச்சரிக்கை

நாவை அடக்கி பேச வேண்டும்: ராகுல் காந்திக்கு எச். ராஜா எச்சரிக்கை
X

மீஞ்சூர் அடுத்த மடியூரில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

நாவை அடக்கி பேச வேண்டும் என ராகுல் காந்திக்கு எச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5கட்சி அமாவாசை செல்வப்பெருந்தகை போன்ற தீய சக்திகள் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. அறநிலையத்துறை என்பது கறவை மாடு போல என்பதால் தான் ஊழல்வாதிகள் அதனை விடுவதில்லை. நீங்கள் சிறுபாண்மை குறித்து பேசினால் நாங்கள் பெரும்பான்மை குறித்து பேசுவோம். ராகுல் காந்தி நாவை அடக்கி பேச வேண்டும் என எச்.ராஜா அளித்த பேட்டியில் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மடியூரில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதீஸ்வரர் ஆலய நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், எடுக்கப்பட்ட புதையலுக்கு கணக்கு இல்லை என தெரிவித்தார். ஊழல்வாதிகள், திராவிடியன் ஸ்டாக்கிற்கு அறநிலையத்துறை என்பது கறவை மாடுகள் போல எனவும் அதனால் தான் விடுவதில்லை என்றார். ஏராளமான ஊழல்கள் நடைபெற்று வருவதாக சாடினார். அறநிலையத்துறை என்கிற அழிவுத்துறை உள்ள வரையில் இந்துக்களுக்கு மத சுதந்திரமும் இல்லை எனவும், அரசு ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்துக்கள் அரசை ஆலயத்தை விட்டு வெளியேற்றும் நிலை உருவாகும் என்றார்.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து கிடப்பதாகவும், விஷசாராய அரசு இருந்தால் சட்டம், ஒழுங்கு இருக்குமா என வினவினார். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என திருமாவளவன், செல்வப்பெருந்தகை ஆகிய இருவரும் கூறியுள்ளதாகவும், இருவருக்கும் உண்மை குற்றவாளிகள் யார் என்பது தெரியும் என்பதால் தான் அவ்வாறு கூறியுள்ளனர் எனவும், காவல்துறை இருவருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்திட வேண்டும் என கேட்டு கொண்டார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முன்பே கடந்த மாதமே குற்ற பின்னணி உள்ள செல்வப்பெருந்தகை என தான் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்த எச்.ராஜா செல்வப்பெருந்தகை போன்ற தீய சக்திகள் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்கு நேற்று அவர் பேசிய பேச்சு உதாரணம் என்றார்.

செல்வப்பெருந்தகை தொடர்பான குற்ற பின்னணியை அண்ணாமலை கூறியதற்கு அண்ணாமலை மீது பிசிஆர் வழக்கு தொடுப்பேன் என பேசியது தவறான உதாரணம் எனவும், அவ்வாறு மிரட்டல் விடுக்கும் செல்வப்பெருந்தகையை கைது செய்ய வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியில் கவுரவமானவர்கள் யாரும் இல்லை என்பது செல்வப்பெருந்தகையை தலைவராக நியமிதித்ததிலேயே தெரிந்து கொள்ளலாம் என்றார். 302 உட்பட பல்வேறு வழக்குகள் இருந்த நிலையில் அதெல்லாம் எப்படி திரும்ப பெறப்பட்டது என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி என எச்.ராஜா கூறினார்.

ஆடிட்டர் பாண்டியன் வழக்கில் பெயர் இருந்ததல்லவா எனவும், செல்வப்பெருந்தகை போன்றவர் தலைவராக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இழுக்கு என நினைப்பவர்கள் அவரை நீக்க வேண்டும் அல்லது மோடி தலைமையை ஏற்று பாஜவுக்கு வந்து விடுங்கள் என காங்கிரஸ் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார். சரியான தலைமையுடைய கட்சியல்ல காங்கிரஸ் என்றார். 5கட்சி அமாவாசை என செல்வப்பெருந்தகை மீது எச்.ராஜா விமர்சனம் செய்தார். மேலும் விழுப்புரம், சிதம்பரம் கட்சி விசிக எனவும் நக்கலடித்த ராஜா, ஒரு கட்சியின் கொள்கையில் இருக்க முடியாத மண் குதிரையை கொண்டு வந்து காங்கிரஸ் தலையில் கட்டி கொண்டால் அவரை எப்படி ஏற்று கொள்வார்கள் என்றார். பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைத்தால் பட்டியலின சகோதரர்களை ஒன்று திரட்டி செல்வப்பெருந்தகைக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தும் என எச்சரித்தார்.

பாஜகவில் குற்ற பின்னணி உடையவர்கள் இணைவது குறித்த கேள்விக்கு இவர்கள் யார் எனவும், காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் டி.ஜி.பி.யா என கேள்வி எழுப்பினார். எங்கள் கட்சி தலைவர் போலீஸ் என்றால் உங்கள் கட்சி தலைவர் திருடன் என எடுத்து கொள்ளலாமா என்றார். செல்வப்பெருந்தகை மீது வழக்குகள் ஏதும் இல்லையே என்ற கேள்விக்கு கேரளா முதல்வர் பினராய் விஜயன் மீது கொலை குற்றச்சாட்டு இருந்ததாகவும், அவர் விடுதலையானதில் எத்தனையோ வழிகள் இருப்பதாக கூறினார். குற்றவாளிகளுடன் தொடர்பு இருந்ததால் தானே 302பிரிவு வந்ததாக கேள்வி எழுப்பினார்.

சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜர் போன்றவர்கள் அமர்ந்த இடத்தில் செல்வப்பெருந்தகையா என்பதை யோசித்து பார்க்க வேண்டும் என்றார். பாஜக எப்போதும் கோவில், மதம் சார்ந்து அரசியல் செய்வது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் பெரும்பான்மை சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுப்பதாக உள்ளதா, இல்லையா என்றார். நீங்கள் சிறுபாண்மை குறித்து பேசினால் நாங்கள் பெரும்பான்மை குறித்து பேசுவோம் என்றார். முஸ்லீம், கிறிஸ்தவர் நலன் குறித்து நீங்கள் பேசினால் இந்துக்கள் நலன் குறித்து நாங்கள் பேச வேண்டியுள்ளதாகவும், இந்துக்கள் என்ன அனாதையா எனவும் காட்டமாக தெரிவித்தார். ராகுல் காந்தியை போல தகுதியற்ற இந்து விரோத தீய சக்தி யாருமில்லை எனவும், விதிகளை மீறு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்யும் தரங்கெட்ட அரசியல்வாதி எனவும் கடுமையாக சாடினார். உங்கள் கடவுளை குறித்து நாங்கள் பேசுவதில்லை எனவும் எங்கள் கடவுளை பற்றி ஏன் பேசுகிறீர்கள் எனவும், ராகுல் காந்தி நாவை அடக்கி பேச வேண்டும் எனவும் எச்,ராஜா எச்சரித்தார்.

5கட்சி அமாவாசை செல்வப்பெருந்தகை போன்ற தீய சக்திகள் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. அறநிலையத்துறை என்பது கறவை மாடு போல என்பதால் தான் ஊழல்வாதிகள் அதனை விடுவதில்லை. நீங்கள் சிறுபாண்மை குறித்து பேசினால் நாங்கள் பெரும்பான்மை குறித்து பேசுவோம். ராகுல் காந்தி நாவை அடக்கி பேச வேண்டும் என்றும் எச்.ராஜா அளித்த பேட்டியில் மேலும் கூறினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது