குன்னமஞ்சேரியில் பெற்ற தாயை முட்புதரில் வீசிச் சென்ற மகன்

குன்னமஞ்சேரியில் பெற்ற தாயை முட்புதரில் வீசிச் சென்ற மகன்
X

மகனால் கைவிடப்பட்ட தாய்

குன்னமஞ்சேரியில் பெற்ற தாயை முட்புதரில் போட்டு சென்ற மகன்; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சில பெண்கள் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு முட்புதரில் அழுகை சத்தம் கேட்டது. அந்த பெண்கள் முட்புதருக்கு சென்று பார்த்தபோது ஒரு மூதாட்டி அங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் இருந்த அந்த மூதாட்டியை அங்கிருந்து மீட்டு தூக்கி வந்த அவர்கள் பொன்னேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டியின் பெயர் காந்திமதி என்பதும் அவர் சென்னையை அடுத்த மணலி அருகே உள்ள பெரியசேக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவரது மூத்த மகன் பெயர் ரவி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இளைய மகன் பெயர் சங்கர் குறிசொல்பவர் என்பதும் தெரியவந்தது. தனது இளைய மகன் சங்கர் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் இங்கு அழைத்து வந்து முட்புதரில் போட்டு விட்டு சென்றதாகவும் அந்த மூதாட்டி போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மூதாட்டியை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பெற்ற மகனே வயதான தாயே கொஞ்சமும் இரக்கமில்லாமல் முட்புதரில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்