பொன்னேரி அருகே காரனோடையில் அனுமன் ஜெயந்தி
பொன்னேரி அருகே காரனோடையில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மார்கழி மாதம் மூல நட்சத்திர நன்னாளான இன்று அனுமன் ஜெயந்தித் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஸ்ரீ அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம், புத்தி, கீர்த்தி, பலம், தைரியம், மனோ சக்தி ஆகியவற்றை அருள்பவர், அனுமனை வரம் அருளும் மூர்த்தி, வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி இவர் என்பதால் நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காரனோடையில் உள்ள அதிசய விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட நறுமண திரவியங்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கிரக தோஷம் நீங்க ஆஞ்சநேயருக்கு வடை மாலையும், கல்வியில் தடை, சுனக்கம் நீங்க வெற்றிலை மாலையும், பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடி வாழ தேங்காய் மாலையும், தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலையும், தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு சாற்றியும், குழந்தை பேறு கிட்ட சந்தன காப்பும் சாற்றப்பட்டது.அனுமருக்கு உகந்த பொறிஉருண்டை, புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் மற்றும் பழவகைகள் படையலிடப்பட்டிருந்தது.
விழாவின் நிறைவாக ராமபக்த அனுமனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் இரவாக அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு அறுசுவையுடன் கூடிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதேபோல் ப்ண்டி க்காவனூர் கிராமத்தில் சிவ விஷ்ணு ஆலயத்தில் அமைந்துள்ள அனுமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu