ஆரணியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆரணியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்.

ஆரணியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி பகுதியில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்குள்ள துலுக்க தெரு பகுதியில் கும்மிடிபூண்டி துணை வட்டாட்சியரும் பறக்கும் படை அதிகாரியுமான குணசேகரன் தலைமையில் ஏட்டு முனுசாமி, காவலர் கோபி மற்றும் போலீசார் நேற்று காலை வாகனத் சோதனை செய்யும் போது அந்த வழியாக முட்டை வேன் ஒன்று வந்தது.

அதனை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 15 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

பின்னர் கொசவன் பேட்டை பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் ஹேம குமார் (33) என்பவரை ஆரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!