பெரியபாளையம் அருகே ரூ.1 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் கடத்தல்: இருவர் கைது

பெரியபாளையம் அருகே ரூ.1 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் கடத்தல்: இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களுடன் சல்மான்.

Crime News In Tamil- பெரியபாளையம் அருகே ரூ.1 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் கடத்தியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

Crime News In Tamil- திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுவாயல் பகுதியில் இருந்து ஆரணி நோக்கி வந்த சிறிய சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சரக்கு வாகனத்துடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் அங்குள்ள மளிகை கடையில் சோதனையிட்டு அங்கிருந்த குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான 82கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சரக்கு வாகன ஓட்டுநரான சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சல்மான் மற்றும் மளிகை கடை உரிமையாளரான இளவரசன் ஆகிய இருவரை கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!