பவானி அம்மன் கோவிலில் குண்டம் தீமிதி திருவிழா

பாளையத்து ஶ்ரீ பவானி அம்மன் கோவிலில் குண்டம், தீ மிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்குமேடு கிராமத்தில், பாளையத்து ஶ்ரீ பவானி அம்மன் திருகோவில் உள்ளது. இக்கோவிலில், குண்டம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
10 நாட்களாக நடக்கும் திருவிழாவில் அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி, விரதம் இருந்தனர் ஆலய வளாகத்தில் கூழ் ஊற்றியும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது பின்னர் கிராம் எல்லையில் புனித நீராடி உடல் முழுவதும் சந்தனம் பூசி பூச்சூடியும் காத்திருந்த பின்னர் வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து அம்மன் உலா சென்று பக்தர்கள் ஆலயத்திற்கு அழைத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும்,கரகம் சுமந்தும், தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனர். அப்போது பெண்கள் பக்தி பரவசத்துடன் நடனமாடினர். தீமிதி விழாவில் மீஞ்சூர், பொன்னேரி, காட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
மேலும் வேண்டிய வரம் தரும் அம்மனாகவும், கிரக தோஷங்கள் நீங்குவதற்கும் ,திருமண தடை நீங்கி குழந்தை பாக்கியம் பெறவும், ஒவ்வொரு பௌர்ணமி தினத்தில் 108 ஓம திரவியங்கள் கலந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் துன்பங்களை நீக்கி அம்மன் அருள் கிடைக்கும் என்பது இக்கோவிலில் வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த வருடத்தை விட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாடு செய்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமத்தினர் மற்றும் அறங்காவலர் ஜோதீஸ்வரர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu