கூடுவாஞ்சேரி: ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை!

கூடுவாஞ்சேரி: ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து  நகை-பணம் கொள்ளை!
X

மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பீரோ.

கூடுவாஞ்சேரியில் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கூடுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் அருள் என்பவர் உறவினர் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக தனது வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்றுள்ளார். இன்று மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், 60ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!