100 வயதை கடந்த தாத்தா; ‘ஹேப்பி பர்த்டே’ கொண்டாடி அசத்திய 46 பேரன் பேத்திகள்

100 வயதை கடந்த தாத்தா; ‘ஹேப்பி பர்த்டே’ கொண்டாடி அசத்திய 46 பேரன் பேத்திகள்
X

தாத்தாவுக்கு, பேரன் பேத்திகள் நடத்திய பிறந்த நாள் விழாவில், குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பொன்னேரி, மீஞ்சூரை அடுத்த வல்லூரில் மூன்று தலைமுறைகள் கண்டு, 100 வயதை கடந்த தாத்தாவுக்கு 46 பேரன் பேத்திகள் பிறந்தநாள் விழா நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்டீபன். கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், .5-7-1923 அன்று தனது பெற்றோருக்கு 12வது குழந்தையாக பிறந்தார். ரத்தினசாமி என்னும் இயற்பெயர் கொண்டு 10 அக்காக்கள் ஒரு அண்ணன் என மிகவும் செல்லமாக வளர்ந்து இளம் வயதிலேயே குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றார்.

பின்பு அசோக் லேலண்ட் பணியாளராக சேர்ந்து கிறிஸ்தவ மதத்தை தழுவி ஸ்டீபன் என பெயர் கொண்டு பெத்தானியா திருச்சபைக்கு மூப்பரானார். தனது 25 வது வயதில் சாராள் என்பவரை திருமணம் செய்து 6 பெண்கள், இரண்டு ஆண்கள் என எட்டு பேரை ஈன்றெடுத்து அது இன்று பேரன் பேத்திகள்,கொள்ளு பேரன் பேத்திகள் என 46 பேர்களைக் கொண்டு மூன்று தலைமுறையை வந்து அடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றுடன் நூறு வயதை கடந்த ஸ்டீபனுக்கு மகன்கள்,மகள்கள்,பேரன் பேத்திகள் என அனைவரும் சேர்ந்து நூறாவது நாள் பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்தினர். முதியவர் ஸ்டீபனுடன் பிறந்த 11 உடன் பிறந்தவரின் உறவினர்களும் வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் என அவரது வீடு திருவிழாக் கோலம் பூண்டது.

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து மூன்று தலைமுறையை கண்டு அன்பும் அரவணைப்பையும் கொண்டு நூற்றாண்டு கண்ட முதியவர் ஸ்டீபனிடம் அனைவரும் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர். முதியவர் ஸ்டீபன் இச் சமூகத்திற்கு சொல்லும் பாடமாக தீய பழக்கங்கள் இல்லாமலும், முறையான உடற்பயிற்சி,சரிவிகித உணவு முறை,தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்வதன் பயனாக 100 வயதிலும் கனீர் குரலில் அனைவரையும் ஆசீர்வாதம் செய்த நிகழ்வு, இன்றைய கால தலைமுறையினருக்கு ஒரு பாடமாகும்.

Next Story
உங்கள் திறமைககுக்கு உதவியாக அமையும் AI!