பொன்னேரி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்கள் மீட்பு

பொன்னேரி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்கள் மீட்பு
X

பொன்னேரி அடுத்த வண்டி காவனூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமித்திருந்த அரசு நிலங்கள் மீட்கப்பட்டன 

பொன்னேரி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 3. கோடியே 30 லட்சம் மதிப்பிலான அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வண்டி காவனூர் கிராமத்தில் ஆறு ஏரி குளங்களில் தனி நபர்கள் சிலர் சுமார் 50க்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர். இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்தது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பிஜான் வர்கீஸ், பொன்னேரி ஆர்டிஓ பரமேஸ்வரி (பொறுப்பு) ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், ஆக்கிரமிப்புகள் செய்த இடத்திற்கு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 50 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்வது வருவது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், அரசு நிலத்தை அதிரடியாக மீட்டு, அங்கு யாரும் ஆக்கிமிப்பு செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகையும் வைத்தனர்.

இதேபோல் பூண்டி ஒன்றியம் ஊத்துக்கோட்டை வட்டம் குஞ்சரம் கிராமத்தில் வரவு கால்வாய் மற்றும் ஓடை பகுதியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதையடுத்து, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று அரசு நிலத்தை மீட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி