மீஞ்சூர்: நடமாடும் காய்கறி கடைகளை வட்டாட்சியர் நேரில் ஆய்வு

மீஞ்சூர்: நடமாடும் காய்கறி கடைகளை வட்டாட்சியர் நேரில் ஆய்வு
X
மீஞ்சூரில் நடமாடும் அரசு மலிவுவிலை காய்கறி கடைகளை வட்டாட்சியர் நேரில் ஆய்வு.

மீஞ்சூரில் நடமாடும் அரசு மலிவுவிலை காய்கறி கடைகளை வட்டாட்சியர் நேரில் ஆய்வு.

தமிழக அரசு அறிவித்துள்ள நடமாடும் மலிவுவிலை காய்கறி கடைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகாரியின் முன்னிலையில் அனைத்து இடங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பொன்னேரி தொகுதியில் அடங்கிய பேரூராட்சி ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேரடியாகச் சென்று பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் தரமான காய்கறிகளை மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனரா என்று நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் நேற்று மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய கக்கஞ்சி காலனி பகுதியில் வியாபாரம் செய்யும் வாகனத்தை மடக்கி ஆய்வு செய்து பார்த்தார். அப்போது அதில் அரசு அறிவித்தது போல் தரமான காய்கறிகள் இருப்பதை உறுதி செய்து சென்றார். அவருடன் பேரூராட்சியின் செயல் அலுவலர் சதீஷ் உடனிருந்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!