பொன்னேரி அருகே கஞ்சா வேட்டை 2.0: 3 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

பொன்னேரி அருகே கஞ்சா வேட்டை 2.0: 3 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

பொன்னேரி அருகே கஞ்சா வேட்டையில் 3 டன் குட்கா பறிமுதல் செய்து, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா புழக்கத்தை தடுக்க தீவிர வேட்டை நடத்தப்படுகிறது. தற்போது கஞ்சா வேட்டை 2.0 நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சாணார்பாளையம் பகுதியில் லாரியில் இருந்து சிறிய வாகனத்திற்கு கஞ்சா மாற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது சாலையோரத்தில் லாரியில் இருந்து சிறிய வாகனங்களுக்கு குட்காவை மாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் 20லட்ச ரூபாய் மதிப்புள்ள 3டன் குட்காவையும் அவற்றை கடத்த பயன்படுத்திய 1லாரி, 3சிறிய வாகனங்கள் என மொத்தம் 4வாகனங்களை பறிமுதல் செய்தனர். குட்காவை கடத்தி கொண்டு சிறிய வாகனத்தில் வைத்து புறநகர் பகுதியில் விநியோகம் செய்ய முயன்ற அருள்குமார், குமரேசன், சுபாஷ், பொன்னுத்துரை, தட்சிணாமூர்த்தி ஆகிய 5பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!