பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து: பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்

பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து: பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்
X
சோத்துபெரும்பேடு பகுதியில் பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து: பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதம் - போலீசார் விசாரணை.

சோத்துபெரும்பேடு பகுதியில் பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து; பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதம் - போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த சோத்துபெரும்பேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். முன்தினம் நள்ளிரவு பர்னிச்சர் கடையில் திடீரென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ராஜேந்திரன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். கடையில் இருந்த பல லட்ச ரூபாய் பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!