பொன்னேரி அருகே திருநிலை ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

பொன்னேரி அருகே திருநிலை ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்
X

பொன்னேரி அருகே திருநிலை ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை ஊராட்சியில் ஏ.எம்.பவுண்டேஷன் மற்றும் மணலி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் சார்பில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் மணலி பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் முத்துகிருஷ்ணன், ஏ.எம்.பவுண்டேஷன் நிர்வாகி இந்திராடிசில்வா ஆகியோர் ஏற்பாட்டில் திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்முசிவக்குமார் தலைமையில் நடை பெற்றது.

இந்த முகாமில் மருத்துவர்கள் ஜாபர், அர்ஜூன், அருள், நிஷா ஆகியோர் பொதுமக்களுக்கு கண், பல், மூட்டு, சர்க்கரை, ஈசிஜி, காய்ச்சல், சளி,இரும்பல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளை செய்து பின்னர் உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது குறித்து ஆலோசனைகளை கூறி இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தனசேகர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai marketing future