சோழவரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்!

சோழவரத்தில்  இலவச கண் சிகிச்சை முகாம்!
X
சோழவரத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

சோழவரத்தில் தனியார் நிறுவனம் லைன்ஸ் கிளப் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் சம்பந்தமான பல்வேறு பரிசோதனை செய்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோழவரம் பேருந்து நிறுத்தம் அருகே எஸ்கிவ்எப்டி ஐடி நிறுவனத்தின், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம், சங்கர நேத்ராலயா மற்றும் திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.எஸ்கிவ்எப்டி ஐடி கம்பெனியின் உரிமையாளர் கோகுல் எஸ்.வைதீஸ்வரன், கோடாக் மகேந்திரா லைப் இன்ஸ்சுரன்ஸ் நிர்வாகி ரோஷன்குமார் ஆகியோர் தலைமை தாங்கி இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் ஐந்துக்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் 15க்கு மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு, ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்ணில் ஏற்படும் பிரஷர், கண்ணில் நீர் வடிதல், கிட்ட பார்வை, தூர பார்வை உள்ளிட்ட கண் சம்பந்தமான பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.இதணைத்தொடர்ந்து 15.பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கான தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை அனுப்பி வைத்தனர்.

மேலும் 40 பேருக்கு கண் கண்ணாடி வாங்க ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் லயன் ராஜிவ், கிருஷ்ணமூர்த்தி, ரோஸ், வெங்கடேசன், சிவா உட்பட சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story