பொன்னேரி அருகே திருநிலை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

பொன்னேரி அருகே திருநிலை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்
X

திருநிலை ஊராட்சி அலுவலகம் முன்பு பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் சங்கர நேத்ராலயா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருநிலை ஊராட்சி அலுவலகம் முன்பு பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் சங்கர நேத்ராலயா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை ஊராட்சி அலுவலகம் முன்பு பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் சங்கர நேத்ராலயா சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்முசிவக்குமார் தலைமை தாங்கி இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார். பின்னர் சங்கர நேத்ராலயா மருத்துவர்கள் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.பின்பு கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி சொட்டு மருந்து வழங்கினர்.

இதில் துணைத்தலைவர் தனசேகர், வார்டு உறுப்பினர்கள் ஆஷா, ரேவதி, பிரகதி, பூபதி, கவிதா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்