ஆரணி எம்.கே.வி.அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

ஆரணி எம்.கே.வி.அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
ஆரணி எம்.கே.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எம்.கே.வி.ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏழுமலை,துணை தலைமை ஆசிரியர் செந்தில் மோகன், ஆரணி நகர செயலாளர் முத்து, ஆரணி பேரூராட்சி துணைத்தலைவர் சுகுமாரன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கல்வியாளர் டி.ஜே.கோவிந்தராஜன், ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் முத்தான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தி கல்வி உதவித்தொகை, வழங்கி வருவதாகவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் தரம் குறையாமல் இருப்பதாகவும் கிராமங்களில் சுற்று வட்டார பகுதிகள் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவது பேருந்துகளுக்காக எதிர்பார்க்காமல் எளிதாக வந்து செல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கி வருவதாகவும், இது மட்டுமல்லாமல் ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவர்கள் பசியை போக்கும் வகையில் தாய் உள்ளத்தோடு காலை உணவு திட்ட அறிவித்து பசியினை போக்கியதாக அவர்கள் பேசினார்.
தொடர்ந்து பள்ளியில் பயிலும் 92 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினர்.இதில் சந்தான லட்சுமி குணபூபதி,அத்திப்பட்டு புருஷோத்தமன், ஆரணி கண்ணதாசன், குமார்,வல்லூர் நந்தா,பிரபு,நவின், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் நாகலட்சுமி, ஆசிரியர்கள் விஜயன் ராஜாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu