பொன்னேரியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பொன்னேரியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

பொன்னேரியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பொன்னேரி அருகே முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை பாரதிய ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பொன்னேரி வட்டாரத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் 99 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் விழாவாக நடத்தினர். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர், பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், கொடூர், பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையம் பஜாரில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் தலைமையில் வாஜ்பாயின் திருஉருவ படத்தினை நிறுவி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாபு, தனஞ்செழியன், குமார், நாகராஜ், பாபு, மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பொன்னேரி, தடப்பெரும்பாக்கம் ,கொடூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளர் நந்தன் தலைமையில் நிர்வாகிகள் சிவா ,மகேஸ்வரி, பாலாஜி, ரமேஷ் ,அத்திப்பட்டு திவாகர், தாமரை சோமு மற்றும் இளைஞர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மீஞ்சூர் முப்பாத்தம்மன்கோவில் அருகே ஒன்றிய தலைவர் சிவராஜ் தலைமையில் பரமானந்தம், மணிகண்டன், தங்கமணி, ராஜமன்னார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாஜிபாய் பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம் வழங்கினர். இதேபோல் பல்வேறு இடங்களில் முன்னாள் பாரதபிரதமர் வாஜ்பாய் திருஉருவ படத்திற்கு கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
ai as the future