முன்னாள் முதல்வர் அண்ணா நினைவுநாள்; மீஞ்சூரில் திமுகவினர் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் அண்ணா நினைவுநாள்;  மீஞ்சூரில் திமுகவினர் அமைதி பேரணி
X

சிறுவாபுரி கோவிலில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து நடந்தது. (அடுத்த படம்)  மீஞ்சூரில் அமைதி பேரணி நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு, மீஞ்சூர் திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணி சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 54வது தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் திமுகவினர் பேரறிஞர் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் பேரூர் கழக செயலாளர் தமிழ்உதயன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணி சென்றனர். மீஞ்சூர் ரயில் நிலையம் அருகில் இருந்து பேருந்து நிலையம் வரையில் அமைதி பேரணி நடைபெற்றது. தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு-பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவரம் ஒன்றியம்,சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு 600 பேருக்கு பொது விருந்து உள்ளிட்டவை நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு,கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக சோழவரம் ஒன்றிய திமுக செயலாளர் செல்வசேகரன், மாவட்ட கவுன்சிலர் தேவிதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்,ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், ஊராட்சி மன்றத் தலைவர் ஜான்சி ராணி ராஜா மற்றும் மாவட்ட,ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story