திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து..! காயமடைந்த 10 பேருக்கு எம் எல் ஏ நேரில் ஆறுதல் !

திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து..! காயமடைந்த 10 பேருக்கு எம் எல் ஏ நேரில் ஆறுதல் !
X
மீஞ்சூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியில் பெருமாள் கோவில் திருவிழாவில் ஊர்வலம் போது பட்டாசு வெடித்ததில் சிதறி பத்து பேர் காயமடைந்தார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக சாமி ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது வாணவேடிக்கை மற்றும் பட்டாசு திடீரென வெடித்து சிதறியதால் அங்கு திருவிழாவை கண்டுகளிக்க வந்திருந்த பக்தர்கள் கூட்டம் கூடியிருந்த அங்கு நின்றிருந்த 10.க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக 108.அம்புலன்ஸ் மூலம் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பட்டாசு விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ஸ்டான்லி அரசு மருத்துவர்களிடம் முறையான சிகிச்சை அளிக்குமாறு கேட்டு கொண்டார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!