ஆற்றின் அருகே மரக்கிளையில் கிடந்த மன நோயாளியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மரக்கிளையில் இருந்த வாலிபரை மீட்ட தீயணைப்பு துறையினர்
திருவள்ளூர்மாவட்டம்பொன்னேரி அருகே உள்ள சீமாபுரம் ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொசத்தலை ஆறு உள்ளது. தற்போது பெய்த மழையினாலும் பூண்டி ஏரி உபரி நீர் திறப்பாலும் கொசத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமாபுரம் ஆற்றில் இருந்த மரத்தின் கிளையில் வாலிபர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மேலும் ஆற்றில் வெள்ளப் பெருக்கு உள்ளதாலும் ஆழமான பகுதி என்பதால் மரக்கிளையில் இருந்த வாலிபரை பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்கி காப்பாற்ற முடியாமல் உடனடியாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
மீஞ்சூர் காவல்துறையினர் இதுதொடர்பாக பொன்னேரி,செங்குன்றம், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்
தகவல் கிடைத்ததும் பொன்னேரி தீயணைப்பு நிலைய அதிகாரி சம்பத் தலைமையில் வீரர்களும் செங்குன்றம் தீயணப்பு நிலைய அதிகாரி ஜெயசந்திரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் உடனடியாக ஆற்றுக்குள் இறங்கி நீந்தி நீண்ட நேரம் போராடி சென்று ஆற்றில் இருந்த மரக்கிளையை வெட்டி மரத்தில் இருந்த வாலிபரை உயிருடன் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
பின்னர் மீட்கப்பட்ட வாலிபரை மீஞ்சூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர் விசாரணையில் அந்த வாலிபர் பெயர் பீம்குமார் (வயது 20) வடமாநிலத்தை சேர்ந்தவர் மேலும் மன நோயாளி என தெரியவந்தது. பின்னர் மீட்கப்பட்ட வாலிபரை 108.ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
சரியான நேரத்தில் வந்து ஆபத்தில் கிடந்த மனநோயாளியை தீயணை ப்பு வீரர்கள் உயிருடன் மீட்டதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பெரு ம் பரபரப்பை ஏற்படுத்தியது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu