பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
X

பொன்னேரியில்  கழிவுநீர்த்தொட்டிக்குள்  விழுந்த பசுமாடு மீட்டக்கப்பட்டது.

தண்ணீரை கழிவுநீர் தொட்டிக்குள் பீய்ச்சி அடித்து பசுவை கயிறு கட்டி 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுவை. ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி 3மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல தமது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது சாலையோரத்தில் அருகில் இருந்த சுரேஷ் என்பவரது வீட்டின் மேல்மூடி சிதிலமடைந்த கழிவுநீர் தொட்டிக்குள் பசு தவறி விழுந்தது தத்தளித்தது. இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பசுவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை கழிவுநீர் தொட்டிக்குள் பீய்ச்சி அடித்து பசுவை கயிறு கட்டி சுமார் 1மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் பசு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags

Next Story
ai automation in agriculture