மணலிபுதூர் அருகே மரக்கடையில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு

மணலிபுதூர் அருகே மரக்கடையில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு
X

மணலிபுதுநகர் அருகே பழைய மரக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.  

மணலிபுதூர் அருகே மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மணலி புதுநகர் பகுதி யில் ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமான பழைய மர சாமான்கள் கடை உள்ளது. இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், மணலி தீயணைப்பு நிலைய அதிகாரி முருகானந்தன் தலைமையில், இரு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது எனினும், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!