பொன்னேரி அருகே பேப்பர் சேகரிக்கும் கிடங்கில் தீ விபத்து

பொன்னேரி அருகே பேப்பர் சேகரிக்கும் கிடங்கில் தீ விபத்து
X

பொன்னேரி அருகே பேப்பர் சேகரிக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. (பைல் படம்)

பொன்னேரி அருகே பழைய பேப்பர் சேகரிக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 2 மணி நேரம் போராடி தீ தீயணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர் சேகரிக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வானுயர கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கனகவல்லிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர், கோணி, பிளாஸ்டிக் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. கரும்புகை சூழ்ந்து வானுயர தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தீ அருகில் உள்ள வயல்வெளிக்கும் வீடுகளுக்கும் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பழைய பேப்பர், கோணி சேகரிப்பு கிடங்கில் இருந்த பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கோணி, பஞ்சு உள்ளிட்டவை கொழுந்து விட்டு எரிந்ததால் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!