வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிப்பு
X
வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி அருகே வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு ஏரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடினர். சுமார்600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள 2வது நிலையின் 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கி விட்டது .
  • அனல் மின் நிலையத்திற்குள் தீ கொழுந்து விட்டு எரியும் நிலையில் ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாகவே போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக 2வது நிலையின் 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அனல் மின் நிலையத்தில் அடிக்கடி சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்தால்.தீ கொழுந்து விட்டு எரிந்து வந்ததால் அனல் மின் நிலையத்தில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare