மரக்கடையில் தீ விபத்து! 2 கோடி மதிப்பு பொருட்கள் சேதம்

மரக்கடையில் ஏற்பட்ட பயங்கரத் தீயால் இரண்டு கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.

மீஞ்சூர் அருகே மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 2.கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வீட்டுக்கு தேவையான வாசக்கால், ஜன்னல்,கதவுகள், உள்ளிட்ட மரத்திலான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் கடை அமைத்து நடத்தி வந்தவர் தேவ்பட்டேல்(61) அதே பகுதியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை சண்முக குமுதவல்லி திருமண மண்டபத்திற்கு எதிரில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பை அமைத்து சாலையோரத்தில் கடையினை அமைத்து வியாபாரம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் மரக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள், உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கடை உரிமையாளர், கடையை திறந்து பார்த்தபோது மரசாமான்கள் எல்லாம் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து பதறிவிட்டார். மிகுந்த அதிர்ச்சியில் உடனடியாக மீஞ்சூர் காவல் நிலையத்திற்கும் புகார் தெரிவித்தார், விரைந்து வந்த காவல்துறையினர் பொன்னேரி தீயணைப்பு துறையினரை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

அதற்குள் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. அதனை அணைப்பதற்குள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அருகாமையில் உள்ள கிணறுகளிலிருந்து, டிராக்டர் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீ கட்டுக்கடங்காத நிலையில் எண்ணூர், அத்திப்பட்டு,மணலி புதுநகர்,உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு துறையினரை வரவழைக்கப்பட்டு சுமார் 12 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கிறது எனவும், இதனால் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பொருட்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடம் சேதம் ஆகி உள்ளது என தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்தகவலை அறிந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், வட்டாட்சியர் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்ஸாண்டர், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ்உதயன், வல்லூர் தமிழரசன், உள்ளிட்ட பல நேரில் சென்று விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தனர். இந்த பயங்கரத்தை விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து கொண்டது சம்பவத்தால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business