புன்னப்பாக்கம் கிராமத்தில் விவசாயி தற்கொலை, போலீஸ் விசாரணை

புன்னப்பாக்கம் கிராமத்தில்   விவசாயி தற்கொலை, போலீஸ் விசாரணை
X
பைல் படம்
புன்னப்பாக்கம் கிராமத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து வெங்கல் அருகாமையில் அமைந்துள்ள புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி விவசாயி.

இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளர். இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products