மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
X

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Electricity contract workers protest for permanent jobமின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Electricity contract workers protest for permanent jobதமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்மேன், உதவியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

Electricity contract workers protest for permanent jobஇந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியின் போது உயிரிழக்கும் ஊழியர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம், ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லூர் என அடுத்தடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Electricity contract workers protest for permanent jobஇந்நிலையில் வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆந்திராவிற்கு சென்று போராடி வரும் தங்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Electricity contract workers protest for permanent jobஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தமிழக அரசே, தமிழக அரசே ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய், பழிவாங்காதே பழிவாங்காதே ஒப்பந்த தொழிலாளர்களை பழி வாங்காதே, ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் குடும்பம் இருக்கு, எங்களையும் கருணையுடன் கவனி, பணியின்போது இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கு, கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை வழங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!