ரேஷன் பொருள் வீடு தேடி வரும் : பொன்னேரி அதிமுக வேட்பாளர் உறுதி

ரேஷன் பொருள் வீடு தேடி வரும் :  பொன்னேரி அதிமுக வேட்பாளர் உறுதி
X
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று அதிமுக வேட்பாளர் உறுதி அளித்தார்.

பொன்னேரி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி வாக்கு சேகரித்த வேட்பாளருக்கு வேல் ஒன்றை அதிமுகவினர் பரிசாக வழங்கினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக களம் கண்டிருப்பவர் சிறுணியம் பலராமன். தற்போது எம்எல்ஏவாகவும் உள்ள சிறுணியம் பலராமன், விச்சூர் கிராமத்தில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர், தெருவின் இருபுறங்களிலும் மலர் தூவி ஆரத்தி எடுத்து அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளருக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து அக்கட்சியினர் வேல் பரிசாக கொடுத்தனர்.

இனி உங்கள் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள். அதிமுக சொன்னதை சரியாக செய்யும் அம்மா வழி வந்த கட்சி. ஆகவே, அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று பேசினார்.

Tags

Next Story
business ai microsoft