பொன்னேரியில் முன்னுவிராத காரணமாக முதியோர் வெட்டிக் கொலை

Murder Case | Tiruvallur News
X

பைல் படம்.

Murder Case - பொன்னேரியில் பட்டப்பகலில் முதியவர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder Case - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பர்மா நகர் பகுதியை சேர்ந்த முதியவர் சுப்பையா (70) கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தமது மனைவியுடன் அதே பகுதியில் தள்ளு வண்டியில் சிற்றுண்டி கடையையும் நடத்தி வந்துள்ளார்.

இவரது மனைவி ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கடையை திறக்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று மாலை இவர் கடையின் அருகே அமர்ந்திருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் முதியவர் சுப்பையாவை தலை மற்றும் கைகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து மயங்கிய முதியவரை அப்பகுதி மக்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முதியவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் வழியிலேயே சுப்பையா நிலைமை மோசமானதால் பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சுப்பையாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பர்மா நகர் பகுதியில் முதியவர் சுப்பையாவின் வீட்டின் அருகே முனீஸ்வரன் கோவில் உள்ள நிலையில் அதனை நிர்வகிப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், இந்த பிரச்சனையில் கொலை நடந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையின் அருகே முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!