பொன்னேரியில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பொன்னேரியில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69.வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் எங்கும் சிறப்பாக அக்கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் விஜயகுமார் தலைமையில் அக்கட்சியினர் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், கடை வியாபாரிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து சட்டமாமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். விஜயகுமார் தலைமையில் ஊத்துக்கோட்டை அருகே தொம்பரமேடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பைரவர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தி ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த விழாக்களில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu