/* */

மீஞ்சூர் அருகே மேல்நிலைப்பள்ளியில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. ஆய்வு

மீஞ்சூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. ஆய்வு பணி மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மீஞ்சூர் அருகே மேல்நிலைப்பள்ளியில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. ஆய்வு
X

சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் அருகே காட்டூரில் அரசு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில், காட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 600 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வந்த மாண்டஸ் புயல் தொடர் மழையின் காரணத்தினால், பள்ளியின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த காரணத்தினால் பள்ளி வளாகத்தில் கால்நடைகள், பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் அனைத்தும் பள்ளியின் உள்ளே வருவதாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் கிராம மக்கள் என பல்வேறு தரப்பினர் ஊராட்சி நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.இந்த அடிப்படை பிரச்சனை குறித்து பொன்னேரி எம்.எல்.ஏ.வுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் பெயரில் பொன்னேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ- மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளியில் உள்ள குறைகளை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், பள்ளியில் உள்ள சத்துணவு மையத்திற்குச் சென்று பார்வையிட்டு உணவை பரிசோதனை செய்து பார்வையிட்டு. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் இந்த ஆய்வின் போது காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, சமூக ஆர்வலர் ஜோதீஸ்வரன், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.

Updated On: 19 Dec 2022 7:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  4. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  8. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  9. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை