அரசு தொடக்கப்பள்ளியில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. ஆய்வு

அங்கன்வாடி மையத்தில் சத்துணவை ஆய்வு செய்தார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்.
பெரியபாளையம் அருகே மல்லியங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் ஆய்வு செய்தார்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி அடுத்த மல்லியங் குப்பம் கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று மற்றும் அங்கன்வாடி மையம் ஆகிய இரண்டு கட்டிடங்கள் உள்ளது. அங்கன்வாடி மையத்தில் 25 மாணவர்களும் தொடக்கப் பள்ளியில் சுமார் 40.க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு படிக்கின்றார்கள் என்பதை கண்டறிய திடீரென பொன்னேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சமைக்கப்படும் சமையலறைக்குள் சென்று உணவு தரமாக உள்ளதா என அதனை உட்கொண்டார்.
மாணவர்களே எவ்வாறு படிக்கின்றனர், அவர்களது பொது அறிவு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிவதற்காக பொது அறிவு சார்ந்த சில கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டார். இதில் மாணவர்கள் எம். எல். ஏ. துரை சந்திரசேகர் கேட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதில் அளித்தனர். மேலும் அடிப்படை வசதிகளை அனைத்தும் உள்ளதா என்று தலைமை ஆசிரியர் நிர்மலாவிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
அப்போது தலைமை ஆசிரியர் இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் தேவை என்று எம்.எல்.ஏ.விடம் ஒரு கோரிக்கை வைத்தார். விரைவில் சம்பந்தப்பட்ட துறையினரிடம் இது குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது ஆரணி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், கவுன்சிலர் ரஹ்மான் கான், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பாலசுப்பிரமணியம் ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மல்லியங் குப்பம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி அன்று உதயகுமார் மாலதி தம்பதியினர் வீட்டில் மர்ம நபர் ஒருவர் ஆள் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் நுழைந்து மாலதியை கத்தியால் தாக்கி வீட்டிலிருந்த நகை பணம் கொள்ளையடித்துச் சென்றார். பலத்த காயத்தில் மாலதி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வீட்டிற்கு எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் நேரில் சென்று நிலைமையை விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வெகுவிரைவில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை நிலம் கூறி குற்றவாளிகளை யார் என்று கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu