மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில் திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா
மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்.
திருவள்ளூர் மாவட்டம், மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் மகா அக்னி பிரம்மோற்சவ தீமிதி திருவிழா பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனின் அருள் பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மதுரா லிங்க பையன் பேட்டை கிராமத்தில்அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் மகா அக்னி பிரம்மோற்சவ தீமிதி திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் விழா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நாளாக மகாபாரத இதிகாசத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளான அரக்கு மாளிகை பாஞ்சாலி திருக்கல்யாணம் அர்ஜுனன் தபசு துரியோதனன் படுகளம்உள்ளிட்ட நிகழ்வுகள் தினம் தோறும் விழாவாக நடத்தப்பட்டு பஞ்சபாண்டவர்கள் கிருஷ்ணருடன் வீதி உலா வந்து கிராம மக்களுக்கு அருள் பாலித்தனர் இன்று 10 ஆம் நாள் விழாவாக தீமிதி திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி திரௌபதி அம்மனை வழிபாடு செய்தனர்.
விழாவின் இறுதி நாளாக தருமர் பட்டாபிஷேக விழா உடன் விழா நிறைவடைகிறது. தீமிதி விழாவில் பெரும்பேடு, உப்பிரபாளையம் பேட்டை, பெரியமனோபுரம், கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திரௌபதி அம்மனின் அருளை பெற்றனர்.
தீமிதி விழாவானது வண்ண மயமான வான வேடிக்கைகளுடன் சிறப்பாக நடைபெற்றது அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu