பரிசுப்பொருள் இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்த திமுக கவுன்சிலர்

பரிசுப்பொருள் இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்த திமுக கவுன்சிலர்
X
திமுக கவுன்சிலர் பரிசுப்பொருள், இனிப்பு வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொன்னேரியில் திமுக கவுன்சிலர் பரிசுப் பொருள் இனிப்பு வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது.

இதில் 27 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் இந்நிலையில் கவுன்சிலர்கள் சிலர் தங்களது பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன்படி பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு திமுக கவுன்சிலர் நல்லசிவம் என்பவர் தங்களது பகுதி வாக்காளர்களுக்கு சில்வர் தட்டில் இனிப்புகள் நன்றி துண்டுப் பிரசுரம் வைத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அப்பொழுது அப்பகுதி மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர் மேலும் சில பெண்கள் ஆரத்தி எடு த்து வரவேற்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுபொன்னேரியில் திமுககவுன்சிலர் பரிசுப் பொருள் இனிப்பு வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவி த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.

Tags

Next Story