பொன்னேரி நகராட்சியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

பொன்னேரி நகராட்சியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு
X

பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 9 மற்றும் 10வது வார்டு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அக்கட்சியினர். 

பொன்னேரி நகராட்சியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் திமுகவினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அவ்வகையில், 9வது வார்டு உறுப்பினர் உமா மோகன்ராஜ், 10-வது வார்டு அஸ்ரப் முன்னிசா முகமது ஷக்கிள் ஆகியோருக்கு ஆதரவாக, உதயசூரியன் சின்னத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப்பிரிவு அமைப்பாளர் முகமது அலவி தலைமையில், தீவிரமாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

இதில், மாவட்ட பிரதிநிதி ரவி, மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலரும் மீனவரணி துணை அமைப்பாளருமான தமின்ஷா, மீனவரணி துணை அமைப்பாளர் அசோகன், நிர்வாகிகள் கன்னிமுத்து, பழனி, காசி, ரமேஷ்,சரவணன், கருணாகரன் ரமேஷ் சேக் தாவூத் ஸ்ரீதர் அருண் முரளி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story