தீபாவளி சீட்டு விவகாரம்: பொன்னேரியில் காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட எழிலரசி.
பொன்னேரியில் தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்கள் திரும்ப கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் பொன்னேரி தொகுதி மகிளா காங்கிரஸ் தலைவியாக பொறுப்பு வகித்து வருபவர் எழிலரசி. இவர் பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இணைந்து தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரிடம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பலரும் 40.லட்ச ரூபாய் வரையில் பணம் கட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சீட்டு பணத்தை திரும்ப கேட்டு பணம் கட்டியவர்கள் தொந்தரவு செய்வதாக கூறி காங்கிரஸ் பிரமுகர் எழிலரசி விஷமருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் எழிலரசியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்கள் திரும்ப கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu