பேரூராட்சி தலைவர் கணவன் துணைத் தலைவர் இடையே தகராறு: இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு

பேரூராட்சி தலைவர் கணவன் துணைத் தலைவர் இடையே தகராறு: இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
X
ஆரணி பேரூராட்சி தலைவரின் கணவன் மற்றும் பேரூராட்சி துணை தலைவர் இடையே ஏற்பட்ட அடிதடி தகராறு காரணத்தினால் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் தலைவியின் கணவர், துணை தலைவர் இடையே ஏற்பட்ட தகராறில் இருதரப்பு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரணி பேரூராட்சி தலைவரான ராஜேஸ்வரியின் கணவர் நவீன்குமாருக்கும், துணை தலைவர் சுகுமார் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இரு தரப்பினரும் அரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பேரூராட்சி தலைவியின் கணவர் நவீன்குமார் உள்ளிட்ட 4பேர், துணை தலைவர் சுகுமார் உள்ளிட்ட 4பேர் என இருதரப்பினர் மீது தனித்தனியே 2.வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடிதடி தகராறில் பேரூராட்சி தலைவியின் கணவர், துணை தலைவர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!