பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
X
பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். வடகிழக்கு பருவமழை குறித்தும்,பேரிடர் காலங்களில் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை பாதுகாக்க தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் இன்று பள்ளி மாணவர்களிடையே தீ விபத்து பாதுகாப்பு குறித்து தீயணைப்பு வீரர்கள் மாதிரி ஒத்திகையை செய்து காட்டினர்.

மேலும் தீ பரவாமல் தடுப்பது குறித்தும் பேரிடர் காலங்களில் எவ்வாறு பிரச்சனைகளை எதிர்கொள்வது, பிரச்சனைகளை இன்றி பாதுகாப்பாக பொதுமக்களை மீட்பது குறித்தும் பல்வேறு ஒத்திகையை மாணவர்கள் முன்னிலையில் வீரர்கள் செய்து காட்டி விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இந்த ஒத்திகையில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் விஜயகுமார் திரிபுரசுந்தரி, நடராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business