பொன்னேரி அருகே கங்கை அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பொன்னேரி அருகே கங்கை அம்மன் கோவில் தீமிதி திருவிழா
X

ஆண்டார்குப்பம் கங்கையம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி விழா.

பொன்னேரி அருகே கங்கை அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த பாதாள கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலின் 14.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டலுடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. பத்து நாட்கள் கோலாகலமாக விழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாள்தோறும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

கோலங்களில் அம்மன் திரு வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று மாலை விரதம் இருந்து காப்பு கட்டிய200. பக்தர்கள் புனித நீராடி உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு பூச்சூடி காத்திருந்தனர். அவர்களை அம்மன் சென்று அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் முன்னே வர இதை தொடர்ந்து கரகம், அக்னிச்சட்டி ஏந்தியவர்கள் ஆலயம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி. தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதையடுத்து அம்மன் வீதிவுலா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story