பொன்னேரி கோவிலில் பௌர்ணமியையொட்டி 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்

பொன்னேரி கோவிலில் பௌர்ணமியையொட்டி 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்
X
பொன்னேரி அருகே பொன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து வந்தனர்.
பொன்னேரி அருகே பொன்னியம்மன் கோவிலில் பௌர்ணமியையொட்டி பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வேண்பாக்கம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் ஆடி மாதம் திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 13ஆம் ஆண்டு பால் குட திருவிழா நடைபெற்றது. வரசக்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆலய திருப்பணி குழுவினர், பக்தர்கள் தலையில் 1008 பால் குடங்களை சுமந்து பொன்னியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஊர்வலமாக வந்த பக்தர்கள் கொண்டு வந்த பால் பொன்னியம்மன் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றன.

பால் குட திருவிழாவை முன்னிட்டு கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுணியம் பலராமன், பொன்.ராஜா ஆகியோர் கட்சி பாகுபாடின்றி பால்குடம் ஏந்தி வந்து அம்மனை ஒருசேர வழிபட்டது பொதுமக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!