பொன்னேரி அருகே கோயிலை மீட்க கோரி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி அருகே கோயிலை மீட்க கோரி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
X

பொன்னேரி அருகே கோயிலை மீட்க கோரி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொன்னேரி அருகே கோயிலை மீட்க கோரி ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது தேவதானம்,காணிப்பாக்கம், ஊராட்சிகள் இந்த ஊராட்சிக்குட் பட்ட பகுதியில் வட ஸ்ரீரங்கம் எனும் தேவதானம் ஸ்ரீரங்கநாதர் மற்றும் காணியம்பாக்கம் ஸ்ரீ பிரசன்ன ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் புகழ் பெற்ற கோயிலாகும் இக்கோயில் ரங்கநாதர் சையன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதால் முக்கிய தினங்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து ஸ்ரீ ரங்கநாதரை வழிபடுவது வழக்கம். இந் நிலையில் இக்கோயிலுக்கு பல ஏக்கர் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் இதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடத்தப்படாமல் இருப்பதாக கூறப் படுகிறது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைததுறை சார்பில் இக்கோயிலை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விரைவில் கும்பா பிஷேகம் நடத்தப்பட வேண்டு மென ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பலர் இக் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. வினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!