துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X

 கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பொன்னேரி துணை மின் நிலையத்தை110கி.வோ நிலையமாக தரம் உயர்த்திட வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் அவ்வப்போது சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னேரி துணை மின் நிலையம் அருகே சீரான மின் விநியோகத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் பராமரிப்பு, பழுது பார்த்தால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறாமல் நுகர்வோர் பாதிப்பிற்கு உள்ளாவதாக குற்றம் சாட்டினர். பல ஆண்டுகள் பழமையான மின் கம்பிகள் காரணமாக அவ்வப்போது அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டு வருவதாகவும், காலாவதியான துணை மின் நிலையத்தை புதிப்பிக்காததால் மின்தடை ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

மின் நுகர்வு தேவைக்கேற்ப புதிய மின் சாதனங்களை பொருத்தி மின்தடைக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டு கொண்டனர். மேலும் பழமையான பொன்னேரி துணை மின் நிலையத்தை 110கி.வோ. துணை மின் நிலையமாக தரம் உயர்த்திட வேண்டும் என கேட்டு கொண்டனர்.

கட்டணத்தை உயரத்திய போதும் முறையாக மின் கட்டணத்தை செலுத்தி வரும் நுகர்வோருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீரான மின்சாரத்தை வழங்கிட வலியுறுத்தியும், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பிட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!