சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
சோழவரம் அருகே தனியார் நிறுவனத்தில் 20 தொழிலாளர்களை திடீரென வேலையில் இருந்து நீக்கியதால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் தனியாருக்கு சொந்தமான ஹைட்ராலிக் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஹைட்ராலிக் சிலிண்டர் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் புதிய தலைமை பொறுப்பேற்ற பின்பு கடந்த 20 ஆண்டுகளாக பணி புரியும் 20 நிரந்தர தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக வேலை நீக்கம் செய்தது.
இதனை எதிர்த்து அந்நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தின் அராஜக போக்கினை கண்டித்து அந்நிறுவனத்தின் வாசலில் அமர்ந்து கடந்த இன்று நான்காவது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்களை ஆதரிக்கும் விதமாக சிஐடியு சங்கம் தொழிலாளர்களுடன் இணைந்து நிர்வாகத்தின் போக்கினை கண்டித்தும் பணியிடை நீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் எல்லையன் தலைமையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் விஜயன் தலைவர் நடராஜன் மாவட்ட தையல் தொழில் சங்க தலைவர் நடேசன் தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu