மீஞ்சூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

மீஞ்சூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு
X

கொரஞ்சூர் ரெட்டிபாளையத்தில், விபத்தில் உயிரிழந்த மான்.  

மீஞ்சூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொரஞ்சூர் ரெட்டிபாளையத்தில், இன்றுசாலையில் மான் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கும், வனத்றையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் மற்றும் கும்மிடிப்பூண்டி வனத்துறையினர், சாலையில் அடிபட்டு உயிரிழந்து கிடந்த மானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மானின் மீது மோதி உயிர் இழப்பை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story